சிம்மம்: பிப்ரவரி மாத ராசி பலன் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

By News Dsk

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

சிம்ம ராசி அன்பர்களே...

உயர் மட்டத்தில் உள்ள மனிதர்களின் தொடர்பை விரும்பும் உங்களுக்கு, இந்த மாதம் ராசிநாதன் சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் புதனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் ஏற்படலாம்.

புதிய நட்புகள் கிடைக்கும். காரியங்களில் வெற்றி கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் சுமாராக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், அதேநேரம் செலவும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் கைமீறாமல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த காரியங்களில் சுணக்க நிலை மாறி வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை முடித்து வெற்றி கொள்வீர்கள்.

கலைத் துறையினருக்கு கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டி இருக்கும். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது தெளிவாக பேசுவது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது பாதகமாக மாறிவிடும்.

அரசியல் துறையினருக்கு உதவி குணம் மேலோங்கும். அதை சரியான நபர்களுக்கு செய்வது முக்கியம். கவனம் தேவை.

வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். படிப்பில் மட்டுமன்றி விளையாட்டிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: சிவ வழிபாடு

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம் தினங்கள்: 2, 3

அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE