இன்றைய தினம்: 29-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

பராபவ வருடம், சித்திரை மாதம் 16 ம் நாள்,

2026, ஏப்ரல் 29 ம் நாள், புதன்


சூரிய உதயம்: காலை 05:58 AM


இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 12:06 வரை உத்திரம் பின்பு அஸ்தம்

சந்திராஷ்டமம்: சதயம் பூரட்டாதி

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
11:00 - 12:00 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
மதியம் 12.00 - 01.30 வரை

எமகண்டம்:
காலை 07.30 - 09.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்ப தேவையறிந்து செயல்படவும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வேற்றுமதத்தவர் வழியில் உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே, சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பிரியமானவர்கள் உதவிகரமாக இருப்பர். விருப்பமான பயணங்கள் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,விருப்பமானவர்களிடம் மனம் குறைகளை சொல்லவும். தன வரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி நேயர்களே,சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு இருக்கும். வரவு செலவு கணக்குகளை சரிபார்த்துக்கொள்ளவும். எதிரிகள் பலமிழப்பர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியத்தை திறம்பட செய்ய முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். கடன் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

துலாம் ராசி நேயர்களே, உங்களால் சுற்றி இருப்பவர்கள் ஆதாயமடைவர். மனபாரம் குறையும். பெற்றோர்கள் சொல்லபடி நடப்பது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே, அக்கம்-பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்ப பணிகளை கவனித்துக்கொள்ளவும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். மகிழ்ச்சியான செய்தி ஒன்று விரைவில் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்ப ராசி நேயர்களே,எதையும் திட்டவட்டமாக பேசுவது நல்லது. விஐபிகளின் நட்பு கிடைக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மீன ராசி நேயர்களே, எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது முக்கியம். நாள்பட்ட பொருளாதார சிக்கல்கள் தீரும். உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும். புது தொழில் யோகம் அமையும்.


இன்றைய சிறப்பு:

பிரதோஷம்...

கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE