பராபவ வருடம், சித்திரை மாதம் 17 ம் நாள்,
2026, ஏப்ரல் 30 ம் நாள், வியாழன்
சூரிய உதயம்: காலை 05:58 AM
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 01:10 வரை அஸ்தம் பின்பு சித்திரை
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி
சூலம்: தெற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
11:30 - 12:00 வரை
மாலை:
மதியம் 12:30 - 01:30 வரை
இராகு காலம்:
மதியம் 01.30 - 03.00 வரை
எமகண்டம்:
மாலை 06.00 - 07.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே, எதிர்பார்ப்புகளை பாதியாக குறைத்துக்கொள்ளவும். பழைய பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். கடன் தொந்தரவுகள் அவ்வப்போது இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே, புதிய முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். புது நண்பர்களின் ஆதரவு பெருகும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம ராசி நேயர்களே, குடும்ப பெருமைகளை எண்ணி மகிழ முடியும். யாரிடத்திலும் தேவையின்றி விவாதம் செய்ய வேண்டாம். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கன்னி ராசி நேயர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
துலாம் ராசி நேயர்களே, குடும்ப விஷயத்தை பேசாமல் இருப்பது நல்லது. பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் அகலும். வழக்கத்திற்கு மாறான விஷயங்களை செய்ய வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். புது தொழில் யோகம் அமையும்.
தனுசு ராசி நேயர்களே, மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு பேசவும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். எதிரிகள் காணாமல் போவர். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மகர ராசி நேயர்களே, தியானம் மன அமைதிக்கு வழிவகுக்கும். உடல் நலம் சீராகும். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடர முடியும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கும்ப ராசி நேயர்களே, பேசும் வார்த்தைகளில் பொறுமை அவசியம். உறவினர்களால் அனுகூலமான பலன் உண்டு. தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மீன ராசி நேயர்களே, பொருளாதார நிலை சீராக இருக்கும். சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
இன்றைய சிறப்பு:
சுபமுகூர்த்த நாள்...
மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!