பராபவ வருடம், சித்திரை மாதம் 25 ம் நாள்,
2026, மே 07 ம் நாள், வியாழன்
சூரிய உதயம்: காலை 05:55 AM
இன்றைய நட்சத்திரம்: மாலை 04:45 PM வரை பூராடம் பின்பு உத்திராடம்
சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் திருவாதிரை
சூலம்: தெற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
10:30 - 11:30 வரை
மாலை:
12:30 - 01:30 வரை
இராகு காலம்:
மதியம் 01.30 - 03.00 வரை
எமகண்டம்:
காலை 06.00 - 07.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,கனிவனான பேச்சால் எல்லோரையும் கவர முடியும். உடல் ஆரோக்கியத்திற்கு வெளி உணவுகளை தவிர்க்கவும். பிரச்னையை எதிர்கொள்ளும் துணிச்சல் வரும். உத்யோக மாற்றம் ஏற்ப்படும்.
ரிஷப ராசி அன்பர்களே,குடும்ப கௌரவத்தை உயர்த்த முடியும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மிதுன ராசி அன்பர்களே,குடும்ப தேவைக்குக்கேற்ப பொருள் சேர்க்கவும். உடல் நலம் சீராகும். நெருக்கமானவர்களுடன் கருத்து மோதல்கள் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே, யாரையும் குறை சொல்ல வேண்டாம். தொடர் வேலைகளால் அசதி, சோர்வு ஏற்படும். பொருட்களை வாங்கிச் சோ்ப்பதில் ஆா்வம் கூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சிம்ம ராசி நேயர்களே,பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கவும். பணத்தேவைகள் அதிகரிக்கும். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
கன்னி ராசி நேயர்களே, எதிலும் சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. விருப்பமான பயணங்களை மேற்கொள்ள முடியும். புது தொழில் யோகம் அமையும்.
துலாம் ராசி நேயர்களே, இறை பணிகளில் ஆர்வம் வரும். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும். விஐபிகளின் நட்பு கிடைக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
தனுசு ராசி நேயர்களே, மனக்குழப்பங்கள் தோன்றி மறையும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
மகர ராசி நேயர்களே, சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதமாக முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
கும்ப ராசி நேயர்களே,சுக, துக்கங்களை வெளியில் பகிர வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
மீன ராசி நேயர்களே, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கவும். பிரபலங்களின் தொடர்பு உற்சாகம் தரும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து போகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
இன்றைய சிறப்பு:
தேய்பிறை சஷ்டி விரதம்...
மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!