இன்றைய தினம்: 12-May-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

பராபவ வருடம், சித்திரை மாதம் 29 ம் நாள்,

2026, மே 12 ம் நாள், செவ்வாய்


சூரிய உதயம்: காலை 05:54 AM


இன்றைய நட்சத்திரம்: இரவு 09:26 PM வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

சந்திராஷ்டமம்: மகம் பூரம்

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
07:30 - 08:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
மதியம் 03.00 - 04.30 வரை

எமகண்டம்:
காலை 09.00 - 10.30 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,புத்திசாதூரியம் மூலம் வெற்றி கிடைக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி அன்பர்களே,யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். எதிர்பாலினத்தாரால் வீண் செலவுகள் வரும். காரிய தடை விலகும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி அன்பர்களே,தெய்வ பக்தி அதிகரிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். திட்டமிடாத செலவுகளால் பண விரையம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கடக ராசி அன்பர்களே, சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற முடியும். நல்ல நண்பர்களால் நல்லது நடக்கும். கொடுக்கல், வாங்கலில் எப்போதும் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு

சிம்ம ராசி நேயர்களே,அவசரத்தில் எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். செலவுகளை குறைத்துக் சேமிக்க பழகவும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே, பிரபலங்களின் நட்பு உற்சாகம் தரும். யாரை தான் நம்புவது என்ற மனக்குழப்பம் வரும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே, மனதில் இருந்த புது திட்டங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே,முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். சொந்த பந்தங்களின் வருகை ஆதாயம் தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு ராசி நேயர்களே, புதிய முயற்சிக்கு நல்ல பலன் உண்டு. உடல் சோர்வு நீங்கும். முக்கிய நபர்களின் சந்திப்பால் மனம் மகிழும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரிய வரும்.

மகர ராசி நேயர்களே, ஆன்மீகத்தில் நாட்டம் வரும். சென்ற இடத்தில் எல்லாம் மதிப்பு கூடும். உறவினர்கள் சிலரால் பண நெருக்கடிகள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கும்ப ராசி நேயர்களே,வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிரமம் இருக்கும். வேண்டியவர்களுக்கு உதவி செய்ய முடியும். எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மீன ராசி நேயர்களே, பிரச்சனையை தீர்க்க புதுமையான அணுகுமுறையை கையாளவும். தன வரவுக்கு வாய்ப்புண்டு. நெருங்கிய உறவினர்கள் பாச மழை பொழிவர். தொழில், வியாபாரம் சிறக்கும்.


இன்றைய சிறப்பு:

சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE