பராபவ வருடம், வைகாசி மாதம் 02 ம் நாள்,
2026, மே 16 ம் நாள், சனி
சூரிய உதயம்: காலை 05:54 AM
இன்றைய நட்சத்திரம்: மாலை 05:34 வரை பரணி பின்பு கார்த்திகை
சந்திராஷ்டமம்: சித்திரை சுவாதி
சூலம்: கிழக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
07:30 - 08:30 வரை
மாலை:
04:30 - 05:30 வரை
இராகு காலம்:
காலை 09.00 - 10.30 வரை
எமகண்டம்:
மதியம் 01.30 - 03.00 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,நினைத்த வேகத்தில் வேலைகளை முடிக்க முடியும். நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும்.
ரிஷப ராசி அன்பர்களே,குடும்பத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மிதுன ராசி அன்பர்களே, எல்லோரிடமும் கனிவோடு பழகும் குணம் இருக்கும். பெரியோர்களின் அன்பை பெற முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கடக ராசி அன்பர்களே, தெய்விக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். எதிரிகள் காணாமல் போவர். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் பதற்றமான சூழல் இருக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
கன்னி ராசி நேயர்களே, மனதில் உள்ள எண்ணங்கள் ஈடேறும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
துலாம் ராசி நேயர்களே, எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்யவும். குலதெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
விருச்சிக ராசி நேயர்களே, மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளவும். பணத்தேவைகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தனுசு ராசி நேயர்களே, இன்று எடுக்கும் முயற்சிகள் யாவும் மகிழ்ச்சியை தரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உறவினர்களிடம் இருந்த மனவருத்தம் நீங்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மகர ராசி நேயர்களே, குடும்ப நலன் கருதி செயல்படவும். பெற்றோரின் ஆதரவு தொடரும். சற்றும் எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கும். உத்யோகத்தில் உயர் நிலை உண்டு.
கும்ப ராசி நேயர்களே, குடும்ப செலவுகளை கட்டுப்படுத்தவும். மற்றவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே, உங்கள் அனுபவ வெளிப்படும். புதிய நண்பர்களின் சிநேகிதம் கிடைக்கும். புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இன்றைய சிறப்பு:
அமாவாசை...
கார்த்திகை விரதம்...
ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!