பராபவ வருடம், வைகாசி மாதம் 05 ம் நாள்,
2026, மே 19 ம் நாள், செவ்வாய்
சூரிய உதயம்: காலை 05:53 AM
இன்றைய நட்சத்திரம்: பகல் 12:45 வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை
சந்திராஷ்டமம்: அனுஷம் கேட்டை
சூலம்: வடக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
07:30 - 08:30 வரை
மாலை:
04:30 - 05:30 வரை
இராகு காலம்:
மதியம் 03.00 - 04.30 வரை
எமகண்டம்:
காலை 09.00 - 10.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,குடும்பத்தில் சுப செலவுகள் வரும். மன சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷப ராசி அன்பர்களே,எதிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பணம் சேமிப்பு கணிசமாக உயரும். பெற்றோர்களின் ஆலோசனை கை கொடுக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மிதுன ராசி அன்பர்களே, தியானத்தால் மன அமைதி கிடைக்கும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். உற்றார், உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கடக ராசி அன்பர்களே, தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும். பயணங்களால் வீண் அலைச்சல் வரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
சிம்ம ராசி நேயர்களே,பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும். தொந்தரவு தந்தவர்கள் கூட தானாக ஒதுங்குவர். பிரியமானவர்களின் ஆதரவு தொடரும். உத்யோகத்தில் பணி ஆர்வம் கூடும்.
கன்னி ராசி நேயர்களே, எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். உடல், மனம் புத்துணர்வுடன் இருக்கும். பணம் சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
துலாம் ராசி நேயர்களே, வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். திட்டமிட்ட காரியம் ஒன்று வெற்றி பெரும். புது நட்பால் நன்மைகள் அதிகம் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,நீண்ட நாட்களாக நிலவிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டு யோகம் உண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். வண்டி, வாகனத்தில் கவனமாக பயணிக்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கும்ப ராசி நேயர்களே,புதிய முயற்சிகளை ஒதுக்கி வைக்கவும். உடலிலும், மனதிலும் மகிழ்ச்சி நிலவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
மீன ராசி நேயர்களே, குடும்ப ஆதரவை பெருக்கிக்கொள்ள முடியும். தர்மசிந்தனை உண்டாகும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
இன்றைய சிறப்பு:
சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!