21-May-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

பராபவ வருடம், வைகாசி மாதம் 07 ம் நாள்,

2026, மே 21 ம் நாள், வியாழன்


சூரிய உதயம்: காலை 05:53 AM


இன்றைய நட்சத்திரம்: காலை 09:50 வரை புனர்பூசம் பின்பு பூசம்

சந்திராஷ்டமம்: மூலம்

சூலம்: தெற்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
10:30 - 11:30 வரை

மாலை:
12:30 - 01:30 வரை

இராகு காலம்:
மதியம் 01.30 - 03.00 வரை

எமகண்டம்:
காலை 06.00 - 07.30 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,திறமையான பேச்சால் எதையும் சாதிக்க முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியபாரத்தில் போட்டி இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே,முக்கிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,மனதில் நினைத்த காரியம் நடக்கும் நாள். தெய்வ பலத்தால் விருப்பங்கள் நிறைவேறும். ரகசியங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.

கடக ராசி அன்பர்களே, குடும்ப பாரம் அதிகரிப்பது போல் தோன்றும். பொது நலப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

சிம்ம ராசி நேயர்களே,குடும்ப நபர்களால் நன்மை உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் விரைவாக முடிவடையும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்ப பொருளாதார நிலை சீராகும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம் ராசி நேயர்களே, கடுமையான முயற்சியால் முன்னேற்றம் காண முடியும். பெற்றோர்களின் நல் யோசனை கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்ப நலம் மேலோங்கும். நன்மை கிடைக்கக்கூடிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். புது வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகர ராசி நேயர்களே, குடும்ப வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உடல் நிலை பாதிப்புகள் நீங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே,முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

மீன ராசி நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். அவரச முடிவால் தேவையற்ற நெருக்கடிகள் வரும். சொத்து வாங்குவது, விற்பது குறித்த யோசனை வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


இன்றைய சிறப்பு:

கரிநாள்...

மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE