பராபவ வருடம், வைகாசி மாதம் 14 ம் நாள்,
2026, மே 28 ம் நாள், வியாழன்
சூரிய உதயம்: காலை 05:52 AM
இன்றைய நட்சத்திரம்: காலை 10:11 AM வரை சித்திரை பின்பு சுவாதி
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி
சூலம்: தெற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
10:30 - 11:30 வரை
மாலை:
12:30 - 01:30 வரை
இராகு காலம்:
மதியம் 01.30 - 03.00 வரை
எமகண்டம்:
காலை 06.00 - 07.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே, மனதில் தெளிவு நிலை உண்டாகும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். உற்றார், உறவினர்களிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தின் மீது அதிக அக்கறை இருக்கும். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். எதிரிகள் அடிபணிந்து போவர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
மிதுன ராசி அன்பர்களே, தியானம் மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியை தரும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவிகள் தேடி வரும்.
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தினருடன் அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் முடிவடையும். திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். உத்யோத்தில் வேலைச்சுமை குறையும்.
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். உடனிருப்பவர்களால் மனசங்கடம் வரும். காரிய தடைகள் அனைத்தும் விலகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கன்னி ராசி நேயர்களே, குடும்ப நிதி நிலைமை சீர் பெரும். புது நட்பால் நன்மை வந்து சேரும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
துலாம் ராசி நேயர்களே, புது முயற்சிகளை ஒதுக்கி வைக்கவும். தேக நலனில் கவனம் தேவை. அடுத்தவர்கள் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே, புத்திசாலித்தனத்தால் நிறைய சாதிக்க முடியும். முடிந்து போன விஷயங்களை பற்றி பேச வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மகர ராசி நேயர்களே, கஷ்ட, நஷ்டங்களை வெளியில் பகிர வேண்டாம். பெற்றோர்களின் பாசம் கிட்டும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய வேலைகள் முடிவடையும். தீர்க்க முடியாத சிக்கல்கள் இப்போது தீரும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். பெற்றோர்கள் ஆதரித்து பேசுவர். தேவையற்ற விஷயங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
இன்றைய சிறப்பு:
சுபமுகூர்த்த நாள்...
பிரதோஷம்...
பக்ரீத் பண்டிகை...
அக்னி நட்சத்திரம் முடிவு...
மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!