17-June-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

பராபவ வருடம், ஆனி மாதம் 3 ம் நாள்,

2026, ஜூன் 17 ம் நாள், புதன்


சூரிய உதயம்: காலை 05:54


இன்றைய நட்சத்திரம்: மாலை 06:06 PM வரை புனர்பூசம் பின்பு பூசம்

சந்திராஷ்டமம்: கேட்டை மூலம்

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30

மாலை:
04:30 - 05:30

இராகு காலம்:
12.00 - 01.30

எமகண்டம்:
07.30 - 09.00


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்ப தேவையறிந்து செயல்படுவது நல்லது. உடல் நலம் சீராகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

ரிஷப ராசி அன்பர்களே,பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். திருமண காரியம் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,மனதில் ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும். தொடர் பயணங்களால் அலைச்சல் வரும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர்.தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி அன்பர்களே, வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். யாருடைய கருத்தையும் ஏற்க வேண்டாம். உற்றார், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.

சிம்ம ராசி நேயர்களே,கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டியிருக்கும். செலவுகளை குறைத்து சேமிக்க பார்க்கவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிவரும். நம்பியவர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே, வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. தடைப்பட்டு நின்று போன வேலைகள் சீக்கிரத்தில் முடியும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

விருச்சிக ராசி நேயர்களே,அடுத்தவர்களை விமர்சித்து பேச வேண்டாம். புதிய முயற்சிகள் கைகூடும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி கொண்டு போகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே, வசீகரமான பேச்சால் மற்றவர்களை கவர்ந்து இழுக்க முடியும். தொலைதூரச் செய்திகளால் நன்மை உண்டாகும். சாட்சி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மகர ராசி நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். புதிய நண்பர்களின் சேர்க்கை உற்சாகம் தரும். கரிய தடைகள் விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி நேயர்களே,செல்வாக்குமிக்கவர்களின் தொடர்பு கிட்டும். முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைப்பிடிக்கவும் வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி நேயர்களே, நினைப்பது ஒன்றும் நடப்பது வேறொன்றாகவும் இருக்கும். பண வரவில் இருந்த சிக்கல் தீரும். பிரியமானவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.


இன்றைய சிறப்பு:

சுபமுகூர்த்த நாள்

கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE