23-June-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

பராபவ வருடம், ஆனி மாதம் 9 ம் நாள்,

2026, ஜூன் 23 ம் நாள், செவ்வாய்


சூரிய உதயம்: காலை 05:54


இன்றைய நட்சத்திரம்: மாலை 04:25 PM வரை அஸ்தம் பின்பு சித்திரை

சந்திராஷ்டமம்: சதயம் பூரட்டாதி

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
07:30 - 08:30

மாலை:
04:30 - 05:30

இராகு காலம்:
03.00 - 04.30

எமகண்டம்:
09.00 - 10.30


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,மனதில் பல உயர்வான எண்ணங்கள் உதிக்கும். புது சொந்தங்களால் சில நேரங்களில் மனக்கசப்புகள் வரும். பிரியமானவர்கள் நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

ரிஷப ராசி அன்பர்களே,எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். நன்கு தெரிந்தவர்கள் கூட உதவ முன்வருவர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். யாரிடமும் விவாதம் செய்ய வேண்டாம். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தின் மீது உள்ள அக்கறை அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். புது முயற்சியில் இருந்த தடைகள் விலகும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தை பற்றிய கவலை அதிகம் இருக்கும். உணவில் கவனமும், சீரான ஓய்வும் ஆரோக்கியம் தரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த பழைய சிக்கல்கள் தீரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வேலைகளைத் திட்டமிட்டு முடிக்கலாம். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். பல நாள் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். புது நபர்களின் வருகை ஆதாயத்தை தரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு ராசி நேயர்களே, திட்டமிட்ட வேலைகளை முடிப்பதில் சிரமம் இருக்கும். வேண்டியவர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகர ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கும்ப ராசி நேயர்களே,தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பிரியமானவர்கள் வழியில் சில சங்கடங்கள் வரும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. .

மீன ராசி நேயர்களே, மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கவும். நீண்ட நாள் கனவுகளை நனவாக்க முடியும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.


இன்றைய சிறப்பு:

நவமி,

சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE