07-July-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

பராபவ வருடம், ஆனி மாதம் 23 ம் நாள்,

2026, ஜூலை 07 ம் நாள், செவ்வாய்


சூரிய உதயம்: காலை 05:58


இன்றைய நட்சத்திரம்: பகல் 01:06 PM வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

சந்திராஷ்டமம்: பூரம் உத்திரம்

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
07:45 - 08:45

மாலை:
04:45 - 05:45

இராகு காலம்:
03.00 - 04.30

எமகண்டம்:
09.00 - 10.30


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்ப நெருக்கடிகள் வெகுவாக குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். புதுமையான முயற்சியால் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

ரிஷப ராசி அன்பர்களே,எதிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள். ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி அன்பர்களே,உங்கள் ஆலோசனைக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். கடன் தொந்தரவுகள் அவ்வப்போது வரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கடக ராசி அன்பர்களே, வீட்டு உபயோக பொருட்களை வாங்க முடியும். மன குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். சாட்சி கையப்பமிட வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்ம ராசி நேயர்களே,வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்

கன்னி ராசி நேயர்களே, மனதில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் ஆலோசனை உதவியாக இருக்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

துலாம் ராசி நேயர்களே, சொந்த பந்தங்களிடம் இணக்கமாகச் செல்லவும். எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகவும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களின் சுய ரூபம் தெரிய வரும். தூர பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோக மாற்றம் உண்டு.

தனுசு ராசி நேயர்களே, செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். புண்ணிய ஸ்தலங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

மகர ராசி நேயர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசீர்வாதம் உண்டு. பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும். பாதியில் நின்ற வேலைகளை மீண்டும் தொடர முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்ப ராசி நேயர்களே,உங்கள் கடமைகளில் முழுமையாக கவனம் செலுத்தவும். சுக, துக்கங்களை வெளியில் பகிர வேண்டாம். எதிரிகளின் தொல்லை குறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி நேயர்களே, மனமும், உடலும் புத்துணர்வுடன் செயல்படும். பிரியமானவர்களின் வார்த்தைகள் நம்பிக்கையைத் தரும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் அமைதி நிலவும்.


இன்றைய சிறப்பு:

அஷ்டமி,

சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE