மீனம்: பிப்ரவரி மாத ராசி பலன் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

By News Dsk

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மீன ராசி அன்பர்களே...

நட்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் நீங்கள் கற்பனை வளமும் கலையார்வமும் கொண்டவர்கள். ராசிநாதன் சஞ்சாரத்தால் ஆதாயம் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். செவ்வாய் சஞ்சாரம் மூலம் பணவரத்து குறையலாம். மனதில் தைரியம் கூடும்.

தனாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரம், தொழில் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் வழக்கம் போல் இருந்தாலும் திடீர் பணத் தேவை ஏற்படலாம். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் எந்த வேலையை தொடங்கும் முன்பும் அதுபற்றி அதிகம் முடிவெடுப்பது நல்லது.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். நண்பர்களுக்குள் இருந்த கருத்து வேற்றுமை அகலும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பர். எதிர்பார்த்த உதவிகள் திடீரெனெ வந்து சேரும். உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். காரிய அனுகூலம் பெண்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும்.

பழைய பாக்கிகள் வசூலில் இழுபறி இருந்தாலும் பேச்சு திறமையால் வாங்கலாம். மற்றவர்களிடம் பகைமை காட்டுவதை தவிர்ப்பது நல்லது. பலமுறை யோசித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது.

கலைத் துறையினருக்கு எல்லா பிரச்சினைகளும் சாதகமாக முடியும். பெரியோர்களிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்பட வேண்டியது முக்கியம். பணவரத்து தாமதப்படும்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். மற்றவர்களை அனுசரித்து செல்வது மகிழ்ச்சியை கொடுக்கும்.

பரிகாரம்: சித்தர்கள் வழிபாடு சிறப்பை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம் தினங்கள்: 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE