• 02:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

தேவரகொண்டா-வின் "கிங்டம்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு #KINGDOM

deverakonda-kingdom-movie-release-date-announced
entertainment

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம்(KINGDOM) பட ரிலீஸ் தேதியை SITHARA ENTERTAINMENTS நிறுவனம் புரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 31-ம் தேதி வெளியாக உள்ளது.

கவுதம் தின்னனுரி இயக்கத்தில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் கிங்டம்(KINGDOM) என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 'கிங்டம்' திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நீடித்த நிலையில் தற்போது தயாரிப்பாளர்கள் இறுதியான ரிலீஸ் தேதியாக வருகிற ஜூலை 31ம் தேதியை அறிவித்துள்ளனர்.

SCROLL TO NEXT ARTICLE