• 02:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

பிரம்மாண்டமாக மகளின் திருமணத்தை நடத்தி முடித்த நடிகர் கிங்காங்..

actor-king-kong-daughter-wedding-in-a-grand-manner
entertainment

சென்னை: நடிகர் கிங்காங் தன் மகள் திருமணத்தை இன்று (ஜூலை 10-ம்) சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார். திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன.

நடிகர் கிங்காங் தன்னுடைய மகள் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதழை கொடுத்து அதை தன்னுடைய சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் ஏற்கனவே அனைவராலும் பகிரப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூலை 10-ம்) காலை நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா-நவீன் திருமணம் பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோயிலில் இனிதே நடந்தது. குடும்பத்தினர், உறவினர்கள், முத்துக்காளை உள்ளிட்ட நடிகர்கள் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மேலும் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும் அதில் பல முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமான கீர்த்தனா-நவீன் தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் கிங்காங்கின் சொந்த பெயர் சங்கர் ஏழுமலை. சினிமாவில் கிங்காங் என்று கதாபாத்திரத்தில் அறிமுகமானதால் அந்த பெயரிலேயே அவர் தொடர்ந்து அறியப்படுகிறார். ஐந்து மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் கவுண்டமணி, செந்தில் , விவேக், வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்திருந்தார்.

SCROLL TO NEXT ARTICLE