• 02:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

ரீ-ரிலீஸ் ஆகிறது தனுஷின் ‘அம்பிகாபதி’!

dhanush-ambikapathi-is-being-re-released
entertainment

நடிகர் தனுஷ், ஆனந்த் எல். ராயின் "ராஞ்சனா" (2013) படத்தின் மூலம் இந்தி திரைப்பட உலகில் அறிமுகமானார். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் இணைந்து நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இந்தப் படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் ஒருதலைக் காதலை சொல்லும் படமான இதில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டதுடன், சிறந்த ஆண் அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். இந்தப் படம் 2013 ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி "அம்பிகாபதி" என்ற பெயரில் தமிழிழும் வெளியானது.

இதை மீண்டும் இப்போது அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் (Upswing Entertainment Private Limited) என்ற நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் ஆக.1-ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்கிறது. இந்த மறு வெளியீட்டின் போது, ​​செயற்கை நுண்ணறிவுடன் 4K தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன் வெளியாக இருக்கிறது.

SCROLL TO NEXT ARTICLE