• 05:30 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள்!!! ஆனந்தத்தில் திரையுலகம்: முழு விவரம்

full-details-of-national-film-awards-the-entire-film-industry-is-in-a-state-of-joy
Latest News

தேசிய திரைப்பட விருதுகள்: இந்தியாவில், திரையுலகில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர், ஒளிப்பதிவு போன்ற பல்வேறு வகைகளில் திறமையாளர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதை எப்படியாவது பெறவேண்டும் என்பது ஒவ்வொரு திரைப்பட கலைஞரின் கனவும் கூட.

அதன்படி, இந்த ஆண்டிற்கான இந்திய அரசின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 1-ம் (01-08-2025) தேதி அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வில், 2023-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் பங்கேற்றன. இந்தத் தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இறுதி செய்யப்பட்ட இந்த ஆண்டிற்கான இந்திய அரசின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் இதோ,

சிறந்த திரைப்படம்: '12த் பெயில்'

சிறந்த நடிகர்: ஷாருக் கான் (ஜவான்), விக்ராந்த் மாசி(12த் பெயில்)

சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (திருமதி சாட்டர்ஜி மற்றும் நார்வே)

சிறந்த தமிழ் படம்: பார்க்கிங்

சிறந்த குணச்சித்திர நடிகர்: எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)

சிறந்த திரைக்கதை: ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்)

சிறந்த மலையாள படம்: 'உள்ளொழுக்கு'

சிறந்த குணச்சித்திர நடிகை: ஊர்வசி

சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்குமார் (வாத்தி)

சிறந்த குறும்படம்: 'லிட்டில் விங்ஸ்' (தமிழ்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: சரவண மருது சவுந்தரபாண்டின், மீனாட்சி சோமன் (லிட்டில் விங்ஸ்)

சிறந்த இயக்குனர்: சுதீப்தோ சென் (தி கேரளா ஸ்டோரி)

சிறந்த ஒலி அமைப்பு: அனிமல்

சிறந்த தயாரிப்பு: 2018 (மலையாளம்)

சிறந்த தெலுங்கு திரைப்படம்: 'பஹவந்த் கேசரி'

சிறந்த கன்னட திரைப்படம்: கண்டீலு

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விரைவில் விருது வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL TO NEXT ARTICLE