• 05:30 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் மற்றும் சலுகைகள் என்னனென்ன?

what-are-the-benefits-and-salary-of-member-of-parliament
Latest News

மக்களின் குரலாய், அவர்களின் தேவைகள், பிரச்னைகள், கிடைக்கவேண்டிய / தேவையான நிவாரணங்கள் போன்ற அனைத்தையும் அரசிடம் கேட்டு பெறவும், அவர்களின் குரலை சட்டமன்றம் / நாடாளுமன்றம் ஆகியவற்றில் பிரதிபலிக்கவும் தங்கள் பிரதிநிதிகளை மக்கள் சட்டமன்ற உறுப்பினர் / நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெயர்களில் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த உறுப்பினர்களே முதலமைச்சர் / பிரதமர் ஆகியோரை தேர்ந்தெடுக்கின்றனர்.

மாநிலங்களவையை பொறுத்தவரை மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்தல் கல்லூரியால், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சமீபத்தில் கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்த முறைப்படி தான்.

கமலஹாசன் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு பதவியேற்றவுடன் இணையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கான சிறப்பு சலுகைகள் குறித்த தேடுதல் அதிகரித்துள்ளது. அப்படி எவ்வளவு தான் சம்பளம் மற்றும் என்னென்ன சலுகைகள் என்ற விவரங்களை பார்க்கலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் மற்றும் சலுகைகள் என்னனென்ன?

* மாத அடிப்படை சம்பளம் ₹1.24 லட்சமாக பெறுகின்றனர்.
* அமர்வுகள் அல்லது குழு கூட்டங்களுக்கு பங்கேற்கும் ஒவ்வொரு நாளுக்கும் ₹2,500
* தங்கள் தொகுதிப் பணிகளுக்காக மாதாமாதம் ₹70,000
* தங்கள் அலுவலக செலவு, ஊழியர்களின் சம்பளம், தொலைத்தொடர்பு மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட செலவுகளுக்கு கூடுதலாக ₹60,000.

இது மட்டுமன்றி மேலும் பல சலுகைகள் உள்ளன. அவை,

* முன்னாள் எம்.பி.க்கள் ஓய்வூதியமாக மாதத்திற்கு ₹31,000 பெறுகிறார்கள், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் ₹2,500 கூடுதல்
* எம்.பி.க்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆண்டுக்கு 34 உள்நாட்டு விமான பயணங்களுக்கு இலவச அனுமதி. மேலும் ரயிலில் குளிர்சாதன வசதி பயணங்கள்.
* எம்.பி.க்களுக்கு இலவசமாக தங்குமிடம். இது தேவையில்லையெனில் ₹2 லட்சம் மாதாந்திர வீட்டு உதவித் தொகையைத் பெற்றுக்கொள்ளலாம்
* எம்.பி.க்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் இலவசம்.
* மேலும் இலவச மின்சாரம், தண்ணீர் போன்ற பிற சலுகைகளையும் பெறுகிறார்கள்.

SCROLL TO NEXT ARTICLE