• 03:30 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

மே.இ. தீவுகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணி!

pakistan-team-defeats-the-m-e-islands
Latest News

Trinidad: மேற்கு இந்தியத் தீவு, பாகிஸ்தான் (West Indies vs Pakistan) இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி.

டிரினிடாட்டில் உள்ள Brian Lara Cricket Academy யில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவு, பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 49 ஓவர்களில் 280 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து. அதிகபட்சமாக எவின் லீவிஸ் 62 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், கேப்டன் ஷாய் ஹோப் 55 ரன்களும், ராஸ்டன் சேஸ் 53 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். பாகிஸ்தான் அணியின் ஷாகீன் ஷா அப்ரீடி, நசீம் ஷா ஆகியோர் தலா 4, 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர் 281 ரன்​கள் என்ற இலக்​குடன் ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 284 ரன்​கள் எடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது. ஹசன் நவாஸ் 54 பந்​துகளில் 3 சிக்​ஸர்​கள் 5 பவுண்​டரி​கள் என 63 ரன்​களும், ஹூசைன் தலத் 41 ரன்களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். முன்​ன​தாக ரிஸ்​வான் 53, பாபர் அஸம் 47 ரன்​களில் ஆட்டமிழந்தனர்.

5 விக்கெட்கள் வித்தி​யாசத்​தில் வெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடரில் 1 க்கு 0 (1-0) என புள்ளியில் முன்​னிலை வகிக்​கிறது.

SCROLL TO NEXT ARTICLE