நாளை வெளியாகிறதா தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?

thalapathy-69-update-first-look-of-thalapathy-69-to-release-on-republic-day-january-26
Latest News

முழுநேர அரசியலில் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய், தன்னுடைய சினிமா தொழிலில் கடைசி படமாக ’தளபதி 69’ படத்தில் நடித்துவருகிறார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜயின் 69 - வது படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பிரேமலு புகழ் பட நடிகை மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் சேர்ந்து நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது.

"தளபதி 69" ஒரு கமர்சியல் படமாக மட்டும் இல்லாமல் அரசியல் பேசும் திரைப்படமாகவும் இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். படம் கிட்டத்தட்ட 70% முடிந்து விட்டதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் தேதி குறித்த முக்கிய அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கேவிஎன் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் ஜனவரி 26-ம் தேதிக்காக காத்திருக்கும் வகையில் விஜய் மாஸ்ஸாக நடந்துவரும் புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

SCROLL TO NEXT ARTICLE