சிவகார்த்திகேயனின் பராசக்தி டைட்டில் டீசர் வீடியோ எப்படி?

title-teaser-video-of-sivakarthikeyan-new-movie-parasakthi
Latest News

‘பராசக்தி’: ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் பல முன்னணி நடிகர் பட்டாளமே களமிறங்கி நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி டைட்டில் டீசர் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், ஏற்கனவே படத்தின் தலைப்பு வெளியாகி விட்டதால் இப்போது டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுதா கொங்காரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100-வது படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது படம் இது என்பது கூடுதல் சிறப்புகள். அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே இந்தப் படத்தின் தலைப்பு ‘பராசக்தி’ என்ற தகவல் இணையத்தில் கசிந்தது.

டைட்டில் டீசர் எப்படி? :

டைட்டில் டீசர் - இல் புரட்சிக்குத் தயாராகும் மாணவர் படைக்குத் தலைமை தாங்கும் நாயகனாக தோற்றமளிக்கிறார் சிவகார்த்திகேயன். ரவி மோகனுக்கு வில்லன் கதாபாத்திரம் என்பதை டீசர் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. டீசர் இணைப்பு கீழே :

SCROLL TO NEXT ARTICLE