இன்றைய முக்கிய செய்திகள் (மார்ச் 11, 2026) @Topnewstamil #BREAKING #TAMILNEWS

today-march-11-2026-top-news-in-tamil-topnewstamil
Latest News

இன்று மார்ச் 11, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

# மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்து (madurai airport international status)

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் தென் தமிழ்நாட்டில் சுற்றுலா மற்றும் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.

# பிரதமர் மோடி தமிழகம் வருகை (PM Modi in Tamilnadu)

சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி, இன்று திருச்சிக்கு வருகை தந்தார். “வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இதற்காக மத்திய அரசு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது” என்று திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

# 5 புதிய ரெயில் சேவைகள் தொடக்கம்

தமிழகம் உட்பட பல மாநிலங்களை இணைக்கும் 5 புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அம்ரித் பாரத் ரெயில்களும் இடம்பெற்றுள்ளன.

# சிலிண்டர் தட்டுப்பாடு – ஹோட்டல்களுக்கு பாதிப்பு (LPG cylinder shortage)

தமிழகம் உள்ளிட்ட பல நகரங்களில் வணிக LPG கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சிக்கலில் உள்ளன. சில இடங்களில் மெனு குறைத்து அல்லது தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

# விறகு விலை உயர்வு

கேஸ் தட்டுப்பாட்டால் சமையலுக்கு மாற்றாக மரவிறகு பயன்படுத்தப்படுவதால் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் விறகு கடைகளில் கூட்டமும் விலையும் அதிகரித்துள்ளது

# கோயம்புத்தூரில் புதிய EV தொழிற்சாலை

Zelio E-Mobility நிறுவனம் கோயம்புத்தூரில் புதிய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

# IPL 2026 அட்டவணை வெளியீடு (IPL 2026 schedule announcement)

IPL 2026 தொடருக்கான அட்டவணை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியானது. Royal Challengers Bengaluru VS Sunrisers Hyderabad போட்டியுடன் ஐபிஎல் விளையாட்டு மார்ச் 28, 2026 அன்று Bengaluru சின்னசாமியில் மைதானத்தில் தொடங்க உள்ளது

SCROLL TO NEXT ARTICLE