இன்றைய முக்கிய செய்திகள் (மே 07, 2026) #BREAKING #TAMILNEWS

today-latest-news-in-tamil-may-07-2026-top-news-tamil
Latest News

மே 07, 2026: இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!

தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்எல்ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

----------------------------------
தவெகவுடன் கைகோத்த காங்கிரஸ்: தமிழகத்தில் மாறப்போகும் அரசியல் கணக்கு!

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான 118 என்ற இலக்கை எட்டுவதற்காக, தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோத்துள்ளது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருந்த பெரிய கட்சியான காங்கிரஸ், அந்தக் கூட்டணியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

----------------------------------
எந்தச் சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: அதிமுக திட்டவட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் “எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

----------------------------------
யுஏஇ துறைமுகம் மீது ஈரான் தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் - பிரதமர் மோடி கண்டனம்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் புஜைரா துறை​முகத்​தின் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்​தினம் 15 ஏவு​கணை​களை வீசி​ தாக்​குதல் நடத்​தி​யதில் 3 இந்​தி​யர்​கள் படுகாயம் அடைந்​தனர். இதற்கு பிரதமர் நரேந்​திர மோடி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

----------------------------------
அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பம்: கல்லூரிக் கல்வி ஆணையம் அறிவிப்பு!

தமிழகம் முழு​வதும் உள்ள 181 அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் 2026-27-ம் கல்வி ஆண்​டில் இளங்​கலை பட்​டப் படிப்பில் சேர இன்று முதல் மாணவர்​கள் ஆன்லைனில் விண்​ணப்​பிக்​கலாம் என்று கல்​லூரிக் கல்வி ஆணை​யம் நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் தெரிவித்துள்ளது.

----------------------------------
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான எல்டிஎஃப் ஆட்சியை இழந்ததோடு கேரளாவில் தொடங்கிய கம்யூனிஸ்ட் ஆட்சி சகாப்தம் அங்கேயே இப்போதைக்கு முடிந்துள்ளது. இப்போது இந்தியாவில் ஒரு இடத்தில கூட கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது.

----------------------------------
பஞ்சாப் கிங்ஸ் 33 ரன் வித்தியாசத்தில் தோல்வி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபாரம்!

ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கடித்தது, இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது தொடர் தோல்வியாக அமைந்துள்ளது.

SCROLL TO NEXT ARTICLE