இன்றைய முக்கிய செய்திகள் (மே 13, 2026) #BREAKING #TAMILNEWS

today-latest-news-in-tamil-may-13-2026-top-news-tamil
Latest News

மே 13, 2026: இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

நீட் வினாத்தாள் கசிந்ததால் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: சிபிஐ தீவிர விசாரணை!

நீட் வி​னாத்​தாள் கசிந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தால், கடந்த 3-ம் தேதி நடந்த மருத்​துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்பாக கேரளா, மகாராஷ்டிராவில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

----------------------------

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

----------------------------

சி.வி.சண்முகம் அணியை சந்தித்த முதல்வர் விஜய் - அதிமுகவில் அதிகரிக்கும் சலசலப்பு!

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அணியினரை சந்தித்துப் பேசியது அதிமுகவில் சலசலப்பை கூட்டியுள்ளது. இதன் மூலம் சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கான எண்ணிக்கை அதிகரிப்பது உறுதியாகியுள்ளது.

----------------------------

65 போதைப் பொருள் தடுப்பு படை காவல் நிலையங்கள்: அரசாணை வெளியீடு!

தமிழகத்​தில் போதைப் பொருள் தொடர்​பான குற்​றங்​களை தடுத்து கடுமை​யான நடவடிக்​கைகளை எடுக்​கும் வகை​யில், தமிழகம் முழு​வதும் 65 போதைப் பொருள் தடுப்பு காவல் நிலை​யங்​கள் பிரத்​யேக​மாக அமைக்​கப்​படு​கின்​றன. இதற்​கான அரசாணையை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.

----------------------------

அசாம், மேற்கு வங்க தேர்தலில் என்டிஏ வெற்றி: 2027 குடியரசுத் தலைவர் தேர்தலில் கூடிய பலம்!

அசாம், மேற்கு வங்க தேர்தலில் என்டிஏ கூட்டணியின் வெற்​றி​யின் பலனாக மாநிலங்​களவை​யிலும் என்​டிஏ பலம் கூடியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள குடியரசுத் தலை​வர் தேர்​தலில் பாஜக தனது குடியரசுத் தலைவர் வேட்​பாளரைத் தேர்வு செய்வதில் எந்த சிக்​கல் இன்றி வலு​வான நிலை​யில் உள்​ளது

----------------------------

அந்தமான், நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை: 18-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தெற்கு வங்​கக்​கடல் பகுதிகள், அந்​த​மான் கடல் பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்​புள்​ளது என்றும் இதன் காரண​மாக இன்று முதல் தமிழகத்​தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

----------------------------

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 82 ரன்களில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் சீசனின் 56-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது . இதன் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.

SCROLL TO NEXT ARTICLE