சென்னை: தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான நேற்று பவுனுக்கு ரூ.680 குறைந்து ஆறுதல் அளித்த நிலையில், இன்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து புதிய உச்சத்தைத் எட்டியுள்ளது நகை வாங்க நினைப்பவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று அதை விஞ்சி உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.105 வீதம் அதிகரித்து சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ. 7,810 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.62,480 - க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அண்மையில் நிலவும் சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் ஏற்ற இறக்கம் காரணமாக நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலையில் இந்த நிலையற்ற தன்மை காணப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் நகை வாங்க நினைப்பவர்களுக்கு பேரிடியாக உள்ளது.
கடந்த 7 நாட்களின் தங்கம் விலை கடந்து வந்த பாதையை காணலாம்;
Jan 30 - ரூ.7,610
Jan 29 - ரூ.7,595
Jan 28 - ரூ.7,510