கடந்த 15 நாட்களில் ரூ.3,160 அதிகரித்த தங்கம் விலை: எப்படி இருக்கும் தங்கத்தின் எதிர்காலம்?

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை ஏற்றம் வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தை அடைந்து நேற்று ரூ.63,240 க்கு விற்பனையாகி கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.760 அதிகரித்து உள்ளது, நகை வாங்குவோர் மத்தியில் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஏன் இந்த விலை அதிகரிப்பு?
தங்கத்தின் விலை உயர்வுக்கு பல காரணிகள் இருப்பதாகவும் இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு தொடரலாம் என்றும் கணிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். அதற்கான காரணங்களாக அவர்கள் சொல்வது,
பணவீக்க அபாயங்கள்: பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக இவற்றின் நிலையற்ற தன்மைக்கு தங்கத்தின் மீதான எதிர்கால நம்பிக்கை முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த விலை நிச்சயமற்ற தன்மை குறித்து பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் போர் பதட்டங்கள்: சீனா மற்றும் அமெரிக்க இடையேயான பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பை இரு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு அதிரடியாக உயர்த்தியதால், முதலீட்டாளர்கள் மிகுந்த அச்சமும் பாதுகாப்பற்ற தன்மையும் இருப்பதாக உணர்ந்து, தங்கள் முதலீடுகளை தங்கத்தின் மீது திரும்பியுள்ளனர். இதுவே விலையேற்றத்திற்கு அடிப்படையான காரணியாக அமைந்துள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு: அமெரிக்க டாலர் மதிப்பின் ஏற்றமும் சர்வதேச அளவில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
மேலும் வர்த்தக பதட்டங்கள் அதிகரிப்பால் சீனா தொடர்ந்து தங்க இருப்புக்களை குவிக்கக்கூடும் என்ற அச்சமும் இதற்கு முக்கிய காரணம். வெள்ளி விலையும் மெதுவாக ஏறிக்கொண்டே செல்கிறது. அதன் படி நேற்று ஒரு கிராம் ரூ.106-ல் இருந்து ரூ.1 அதிகரித்து ரூ.107-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆகவும் உள்ளது.
கடந்த 15 நாட்களில்:
ஜனவரி மாதம் 22-ம் தேதி ரூ.60,200 - க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம் நேற்றைய தேதியில் ரூ.63,240 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலையேற்றம் என்பது சுமார் ருபாய் 3,000 மேல் என்பது சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு மிகுந்த சவாலாக உள்ளது.
மேலும் இந்த விலையேற்றம் இத்துடன் நிற்காது என்றும் இன்னும் பல உச்சங்களை தொட்டு சாதனை (?) படைக்கும் என்றும் பலர் கணிப்பது இன்னும் கூடுதல் கலக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
#GoldRate #goldprice #silerRate
Tags:
#தங்கம் விலை #gold rate #gold price increase ##GoldRate ##goldprice