இந்தியாவின் 500 மதிப்புமிக்க நிறுவனங்கள்: இரண்டாவது இடத்தில் ZOHO. சந்தை மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னையை தலைமையிடமாக கொண்ட SaaS அடிப்படையிலான Zoho Corporation நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ 1,03,760 கோடியாக உயர்ந்துள்ளது, இது அதன் முந்தைய மதிப்பீட்டான ரூ 65,700 கோடியிலிருந்து 58% அதிகமாகும்.
ஆக்சிஸ் வங்கியின் தனியார் வங்கி வணிகமான Burgundy Private மற்றும் ஆராய்ச்சி & வெளியீட்டு குழுவான Hurun India - வுடன் இணைந்து வெளியிட்டுள்ள "இந்தியாவின் 500 மதிப்புமிக்க நிறுவனங்கள் - 2024" (India’s 500 most valuable companies - 2024) என்ற இந்த அறிக்கையில் Zoho Corporation - ன் இந்த வளர்ச்சி பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பட்டியல் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்களை (அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய துணை நிறுவனங்கள் நீங்கலாக) சந்தை மூலதனம் (Listed firms) மற்றும் மதிப்பீடுகள் (Privately held firms) அடிப்படையில் தர வரிசைப்படுத்தியுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான முதல் 10 நிதி நிறுவனங்களின் பட்டியலில், ரூ 2,11,610 மதிப்பீட்டில் முன்னிலையில் இருந்த "SERUM institute of india"-வை பின்னுக்கு தள்ளி ஸ்ரீதர்-வேம்பு தலைமையிலான Zoho Corporation நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு SaaS அடிப்படையிலான நிறுவனமாக ஸ்ரீதர் வேம்பு உருவாக்கிய இந்த Zoho Corporation - நிறுவனம் தற்போது இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தியாக உயர்ந்திருப்பது தொழில் துறையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியாகும்.
சமீபத்தில் தான் தலைமை நிர்வாக பதவியிலிருந்து விலகி, தலைமை விஞ்ஞானியாகப் ஸ்ரீதர் வேம்பு பொறுப்பேற்றுள்ளார். இந்தப் பதவியில் அவர் நிறுவனத்தின் ஆழமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்வார் என்றும் அடுத்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு இன்னும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியாவின் பங்கு தரகு நிறுவனமான ஜெரோதா (Zerodha) அதன் முந்தைய ஆண்டை விட 50% அதிகரித்து ரூ.87,750 கோடி சந்தை மதிப்புடன் "பட்டியலிடப்படாத(unlisted companies) முதல் 10 நிறுவனங்கள்" பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
Tags:
#Sridhar Vembu #Zoho Corporation #Hurun India 500 report - 2024 #Burgundy Private Hurun #top companies in india