உலகளாவிய உணவு வழிகாட்டியான TasteAtlas, 2025/2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 உணவு வகைகள் மற்றும் உணவகங்களுக்கான நாடுகளின் விருதுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய உணவு வகைகள் மற்றும் பல சர்வதேச உணவுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இது குறித்த விரிவான தொகுப்பு,
TasteAtlas Awards 2025/26: உலகின் சிறந்த உணவு வகைகள்:
TasteAtlas-ன் தரவரிசைப்படி, உலகின் டாப் 100 உணவுகளில் இத்தாலி, ஜப்பான் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்திய உணவு வகைகளுக்கும் கௌரவமான இடம் கிடைத்துள்ளது.
முதல் 5 இடங்களைப் பிடித்த நாடுகள்:
1. இத்தாலி: பிட்சா, பாஸ்தா மற்றும் சீஸ் வகைகளுக்காக முதலிடம்.
2. ஜப்பான்: சுஷி (Sushi) மற்றும் ராமென் (Ramen) உணவுகளுக்காக இரண்டாம் இடம்.
3. கிரீஸ்: ஆரோக்கியமான மத்திய தரைக்கடல் (Mediterranean) உணவுகளுக்காக மூன்றாம் இடம்.
4. போர்ச்சுகல்: கடல் உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளுக்காக நான்காம் இடம்.
5. பிரான்ஸ்: அதன் நேர்த்தியான சமையல் கலைக்காக (Pastries & Bread) ஐந்தாம் இடம்.
இந்திய உணவுகளின் நிலை:
இந்த ஆண்டு பட்டியலில் இந்திய உணவு வகைகள் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று இந்தியா 13-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்திய உணவுகள் அதன் காரமான சுவை மற்றும் பன்முகத்தன்மைக்காக 2025/2026-ல் உலக அளவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அதன்படி,
பட்டர் சிக்கன் (Butter Chicken): உலகின் மிகவும் விரும்பப்படும் கோழி இறைச்சி உணவுகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மசாலா தோசை (Masala Dosa): தென்னிந்தியாவின் அடையாளமான இது, சிறந்த சைவ உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
ஹைதராபாத் பிரியாணி: அதன் தனித்துவமான சுவைக்காக உலகப் புகழ்பெற்ற உணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நான் (Naan): உலகின் சிறந்த 'பிரட்' (Flatbread) வகைகளில் ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, உலகின் சிறந்த 5 உணவுகள் (Dishes) வரிசையில், நாடுகள் ஒருபுறம் இருக்க, தனிப்பட்ட உணவுகளின் அடிப்படையில் இவை முதலிடம் பிடித்துள்ளன:
1. Picanha (பிரேசில்): ஒரு வகை மாட்டிறைச்சி உணவு.
2. Roti Canai (மலேசியா): நமது புரோட்டாவைப் போன்ற ஒரு உணவு வகை.
3. Phat Kaphrao (தாய்லாந்து): துளசி மற்றும் இறைச்சி சேர்த்த வறுவல்.
4. Pizza Napoletana (இத்தாலி): பாரம்பரிய நேபிள்ஸ் நகர பிட்சா.
5. Guotie (சீனா): ஒரு வகை 'டம்ப்ளிங்' (Dumpling).
சிறந்த உணவகங்கள்:
TasteAtlas இந்த முறை உலகின் பாரம்பரியம் மிக்க 100 உணவகங்களையும் பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியாவின் கோழிக்கோடு 'பராகான்' (Paragon) உணவகம் அதன் பிரியாணிக்காக மீண்டும் ஒருமுறை உலகத் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தரவரிசை எப்படி கணக்கிடப்படுகிறது?
TasteAtlas வெறும் விமர்சனங்களை மட்டும் பார்ப்பதில்லை. இது சுமார் 50,000-க்கும் மேற்பட்ட உணவுகளின் மதிப்பீடுகள், உண்மையான உள்ளூர் மக்களின் (Authentic reviews) கருத்துக்கள் மற்றும் உணவுகளின் பாரம்பரியம் மற்றும் செய்முறைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.