ஒரே பாலின ஈர்ப்பாளர்கள் தொன்று தொட்டே தங்கள் உரிமைக்காகவும், தங்கள் உறவுக்காகவும் போராடிக்கொண்டே வந்தாலும் 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, மனித உரிமைகள் மற்றும் தனிமனித சுதந்திரம் குறித்த பார்வையில் உலகம் பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. அதன் காரணமாக 2001-ல் நெதர்லாந்து முதன்முதலில் ஒரே பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கியதில் தொடங்கி ஜனவரி 2025-ல் தாய்லாந்து இந்தச் சட்டத்தை இயற்றிய வரை இன்று உலக மக்கள் தொகையில் 20% பேர் (சுமார் 1.5 பில்லியன் மக்கள்) இந்த உரிமையைப் பெற்றுள்ளனர்.
ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரித்த நாடுகள் நாடுகளும் அதன் ஆண்டும்: நாடுகள்
| ஆண்டு | அங்கீகரித்த நாடுகள் |
| 2001 | நெதர்லாந்து |
| 2003 | பெல்ஜியம் |
| 2005 | கனடா, ஸ்பெயின் |
| 2006 | தென்னாப்பிரிக்கா |
| 2009 | நோர்வே, ஸ்வீடன் |
| 2010 | அர்ஜென்டினா, ஐஸ்லாந்து, போர்ச்சுகல் |
| 2012 | டென்மார்க் |
| 2013 | பிரேசில், பிரான்ஸ், நியூசிலாந்து, உருகுவே |
| 2014 | லக்சம்பர்க், இங்கிலாந்து |
| 2015 | அயர்லாந்து, அமெரிக்கா |
| 2016 | கொலம்பியா, கிரீன்லாந்து |
| 2017 | ஆஸ்திரேலியா, மால்டா, ஜெர்மனி, பின்லாந்து |
| 2019 | ஆஸ்திரியா, ஈக்வடார், தைவான் |
| 2020 | கோஸ்டாரிகா, வடக்கு அயர்லாந்து |
| 2022 | சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா, கியூபா, மெக்சிகோ, சிலி |
| 2023 | அன்டோரா |
| 2024 | எஸ்டோனியா, கிரீஸ், அருபா, குராசோ |
| 2025 | லிச்சென்ஸ்டீன், தாய்லாந்து |
ஜனவரி 2025-ல் தாய்லாந்து இந்தச் சட்டத்தை இயற்றியதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவிலேயே ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் நாடு என்ற வரலாற்றைப் படைத்துள்ளது.
கடுமையான சட்டங்கள்:
மேலும் ILGA வேர்ல்ட் (ILGA World) அறிக்கையின்படி, ஈரான் மற்றும் உகாண்டா உள்ளிட்ட 7 நாடுகளில் இப்போதும் ஒரே பாலின உறவுகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
Special courtesy: "World of Statistics, X.com"