இன்றைய ராசி பலன்கள் - 02-01-2025

02-01-2025 - இன்றைய ராசி பலன்கள்:
மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். நண்பர்களிடையே மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கலைபொருட்கள், வாசனை திரவியம் வாங்கலாம். போதிய பணவரவு இருக்கும். வியாபாரத்தில் நன்மை பயக்கும்.
ரிஷபம்: அலுவலகத்தில் நல்ல சூழல் பிறக்கும். அடமானம் வைத்த பொருட்களை திரும்புவீர்கள். மனைவி வலி உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வியாபாரத்தில் புது உத்திகளை கையாள்வீர்கள்.
மிதுனம்: தவிர்க்க முடியாத செலவுகளால் மனம் கவலையடையும். நல்ல வாய்ப்புகளை தவறவிட்டு விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள், அனால் உங்கள் முயற்சியினால் மீண்டும் அதை அடைய போராடுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கடகம்: விருந்தினர் வருகையால் வீடு சந்தோஷமடையும். உறவினர்கள் மதிப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் அமைதி நிம்மதியை தரும்.
சிம்மம்: புதிய சிந்தனைகளால் மேன்மை அடைவீர்கள். குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் புதியதை கற்றுக் கொள்வீர்கள்.அலுவலக ரீதியான பயணம் ஆனந்தத்தை தரும்.
கன்னி: குடும்பத்தாரின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். புதிய சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவி அனுகூலமாக முடியும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
துலாம்: சக ஊழியர்கள் மத்தியில் மரியாதையை உயரும். வியாபார ரீதியாக முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
விருச்சிகம்: குடும்பத்தினரால் மனநிம்மதி அதிகரிக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதிய நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இழுபறியான வேலைகளை இனிதே முடிப்பீர்கள்.
தனுசு: தம்பதிக்குள் இருந்த சங்கடங்கள் நீங்கும். வரவேண்டிய பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் இரட்டிப்பாகும்.
மகரம்: சிலரால் தர்ம சங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்ல பலனை கொடுக்கும். வியாபாரம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது சிறந்தது.
கும்பம்: அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமையுடன் செயல்பட்டு கடினமான காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். தம்பதிகளுக்குள் விட்டு கொடுத்துப் போவீர்கள். வியாபாரத்தில் லாபம் கொட்டும்.
மீனம்: குடும்பத்தில் நிம்மதி குதூகலிக்கும். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர் வருகையால் உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் அமோகம்.
Tags:
#Daily Horoscope #tamil rasi palangal #daily rasi palan #jodhidam #இன்றைய ராசி பலன்