விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 9 ம் நாள்,
2026ம் வருடம், மார்ச் மாதம் 23 ம் தேதி, திங்கள்
------------------------------------------------------------------------------
சூரிய உதயம்: காலை 06 மணி 17 நிமிடங்கள்
------------------------------------------------------------------------------
இன்றைய நட்சத்திரம்: காலை 01:26 வரை பரணி பின்பு கார்த்திகை மாலை 11:49 PM வரை
சந்திராஷ்டமம்: சித்திரை சுவாதி
சூலம்: கிழக்கு திசை
------------------------------------------------------------------------------
இன்று நல்ல நேரம்:
காலை: 06:30 மணி முதல் 07:30 மணி வரை
மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை
இராகு காலம் : காலை 07:30 மணி முதல் 09.00 மணி வரை
எமகண்டம்: மதியம்: 10.30 மணி முதல் 12.00 மணி வரை
------------------------------------------------------------------------------
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் ராசி நேயர்களே, பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டாகலாம். வியாபாரத்தில் பழைய கடன் பாக்கிகள் வந்து சேரலாம்.
ரிஷபம் ராசி நேயர்களே, குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவேண்டிய நாள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கலாம்.
மிதுனம் ராசி நேயர்களே, வியாபாரம் தொடர்பாக முக்கியப் பிரமுகர்களின் உதவியை நாடுவீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கடகம் ராசி நேயர்களே, பணப் பற்றாக்குறை விலகும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். எதிலும் நிதானம் அவசியம்.
சிம்மம் ராசி நேயர்களே, எதிர்பார்த்த வகையில் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். யாரையும் உதாசீனப்படுத்தாமல் இருப்பது நலம்.
கன்னி ராசி நேயர்களே, உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும் நாள். பணப் புழக்கம் அதிகரிக்கலாம். வீட்டில் அமைதி உண்டாகி ஆன்மிகத்தில் மனம் செல்லும்.
துலாம் ராசி நேயர்களே, சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே, செய்த உதவிகளுக்கு பாராட்டு கிடைக்கலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகலாம். சாதுர்ய பேச்சால் சாதிக்கும் நாள்.
தனுசு ராசி நேயர்களே, தேவையற்ற தடுமாற்றம் நீங்கும். அலுவலகத்தில் வேலைகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
மகரம் ராசி நேயர்களே, புதிய ஆடை, ஆபரணங்கள் சேரலாம். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படலாம்
கும்பம் ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை வளர்க்க திட்டமிடலாம்.
மீனம் ராசி நேயர்களே, சேமிப்புகள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் திருப்தி தரும் நாள் இன்று.
------------------------------------------------------------------------------
இன்றைய சிறப்பு:
கார்த்திகை விரதம்....
நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்.... !!!
------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!