விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 12 ம் நாள்,
2026ம் வருடம், மார்ச் மாதம் 26 ம் தேதி, வியாழக்கிழமை
------------------------------------------------------------------------------
சூரிய உதயம்: காலை 06 மணி 16 நிமிடங்கள்
------------------------------------------------------------------------------
இன்றைய நட்சத்திரம்: மாலை 07:05 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
சந்திராஷ்டமம்: அனுஷம் கேட்டை நட்சத்திரங்கள்
சூலம்: தெற்கு திசை
------------------------------------------------------------------------------
இன்று நல்ல நேரம்:
காலை: 10:30 மணி முதல் 11:30 மணி வரை
மாலை: 12:30 மணி முதல் 01:30 மணி வரை
இராகு காலம்: மதியம் 01.30 மணி முதல் 03.00 வரை
எமகண்டம்: காலை: 06.00 மணி முதல் 07.30 மணி வரை
------------------------------------------------------------------------------
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி நேயர்களே, குடும்ப நலனில் கவனம் தேவை. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பயணங்களால் அலைச்சல் கூடலாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படலாம்.
ரிஷப ராசி அன்பர்களே, மனதில் தெய்வீக சிந்தனைகள் உதிக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கலாம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
மிதுன ராசி நேயர்களே, பொது நல காரியங்களில் ஆர்வம் இருக்கலாம். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடலாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் அனுசரித்து போகவும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தை பற்றிய கவலை இருக்கலாம். புது நண்பர்களால் நன்மை வந்து சேரும். எதிரிகள் தானாக விலகுவர். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும் .
கன்னி ராசி நேயர்களே, வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். மன இறுக்கங்கள் குறையும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கலாம்.
துலாம் ராசி நேயர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். விலகி சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். புது தொழில், யோகம் அமையும்.
விருச்சிக ராசி நேயர்களே, அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படலாம். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு ராசி நேயர்களே, ஆன்மீகத்தில் நாட்டம் வரும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கலாம்.
மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். உடலுக்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளவும். பெரியோர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோக மாற்றம் ஏற்படலாம்.
கும்ப ராசி நேயர்களே, உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீன ராசி அன்பர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். பண விவகாரத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடலாம்.
------------------------------------------------------------------------------
இன்றைய சிறப்பு:
அஷ்டமி,
மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் !!!
------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!