இன்றைய தினம்: 29-Mar-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-29-mar-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 15 ம் நாள்,

2026ம் வருடம், மார்ச் மாதம் 29 ம் தேதி, வியாழக்கிழமை

------------------------------------------------------------------------------

சூரிய உதயம்: காலை 06 மணி 14 நிமிடங்கள்

------------------------------------------------------------------------------

இன்றைய நட்சத்திரம்: மாலை 04:04 வரை ஆயில்யம் பின்பு மகம்

சந்திராஷ்டமம்: பூராடம் உத்திராடம்

சூலம்: மேற்கு திசை

------------------------------------------------------------------------------

இன்று நல்ல நேரம்:

காலை: 06:00 மணி முதல் 07:00 மணி வரை

மாலை: 03:30 மணி முதல் 04:30 மணி வரை

இராகு காலம்: காலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை

எமகண்டம்: மதியம்: 12:00 மணி முதல் 01.30 மணி வரை

------------------------------------------------------------------------------

இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி நேயர்களே, அன்றாட தேவைகள் பூர்த்தியாகும். யாருடைய தவறையும் சுட்டிக் காட்ட வேண்டாம். பெண்கள் வழியில் சில நன்மைகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு.

ரிஷப ராசி நேயர்களே, உற்றார், உறவினர்கள் ஊக்கம் அளிப்பர். இரவு நேர பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் யாவும் ஜெயிக்கும். பண வரவு சில நேரங்களில் தாமதப்படும். பெரியோர்களின் அரவணைப்பு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி நேயர்களே, மனதில் தெளிவான சிந்தனை இருக்கும். சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

சிம்ம ராசி நேயர்களே, தெய்வ காரியங்களில் ஆர்வம் கூடும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே, எதிர்பார்க்காத காரியம் ஒன்று நடக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். பழைய நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம் ராசி நேயர்களே, சவால்கள், விவாதங்களை சந்திக்க நேரிடும். பொது சேவை செய்வதில் ஆர்வம் இருக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிவரும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு ராசி நேயர்களே, மறைமுக விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். தொடர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மகர ராசி நேயர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மீன ராசி நேயர்களே, பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

------------------------------------------------------------------------------

இன்றைய சிறப்பு:

சர்வ ஏகாதசி ....

மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள் இன்று !!!

------------------------------------------------------------------------------

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE