இன்றைய தினம்: 07-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-07-apr-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 24 ம் நாள்,

2026 - ஏப்ரல்- 07ம் தேதி, செவ்வாய்க்கிழமை

------------------------------------------------------------------------------

சூரிய உதயம்: காலை 06 மணி 08நிமிடங்கள்

------------------------------------------------------------------------------

இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 02:21 வரை அனுஷம் பின்பு கேட்டை

சந்திராஷ்டமம்: கார்த்திகை

சூலம்: வடக்கு திசை

------------------------------------------------------------------------------

இன்று நல்ல நேரம்:

காலை: 07:30 மணி முதல் 08:00 மணி வரை

மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை

இராகு காலம்: மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை

எமகண்டம்: காலை: 09.00 மணி முதல் 10.30 மணி வரை

------------------------------------------------------------------------------

இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி நேயர்களே, சொந்த பந்தங்களால் சில நன்மைகள் உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி நேயர்களே, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தின் ஆதரவை பெற முடியும். நண்பர்களால் நல்லது நடக்கும். புதிய நபர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிவரும். முக்கிய பணிகள் நிறைவேறும். பிரியமானவர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

சிம்ம ராசி நேயர்களே, எதையும் ஒளிவு மறைவின்று பேசுவது நல்லது. விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி நேயர்களே, திறமையான பேச்சால் காரியம் சாதிக்க முடியும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப பணிகளை திறம்பட முடிக்க முடியும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே, மனதில் புது தெம்பும், உற்சாகமும் தோன்றும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே, நிலுவையில் உள்ள திட்டங்கள் செயல் வடிவம் பெரும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் வரும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

மீன ராசி நேயர்களே, மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்

------------------------------------------------------------------------------

இன்றைய சிறப்பு:

வராஹ ஜெயந்தி,

சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் !!!

------------------------------------------------------------------------------

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE