இன்றைய தினம்: 09-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-09-apr-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 26 ம் நாள்

2026ம் வருடம், ஏப்ரல் மாதம் 09 ம் நாள், வியாழக்கிழமை

------------------------------------------------------------------------------

சூரிய உதயம்: காலை 06 மணி 06 நிமிடங்கள்

------------------------------------------------------------------------------

இன்றைய நட்சத்திரம்: காலை 07:17 வரை மூலம் பின்பு பூராடம்

சந்திராஷ்டமம்: மிருகசீரிடம்

சூலம்: தெற்கு திசை

------------------------------------------------------------------------------

இன்று நல்ல நேரம்:

காலை: 10:30 மணி முதல் 11:30 மணி வரை

மாலை: 12:30 மணி முதல் 01:30 மணி வரை

இராகு காலம்: மதியம் 01.30 மணி முதல் 03.00 வரை

எமகண்டம்: காலை: 06.00 மணி முதல் 07.30 மணி வரை

------------------------------------------------------------------------------

இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி நேயர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

ரிஷப ராசி நேயர்களே, கொடுக்கல், வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேண்டியவர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி அன்பர்களே, நீண்ட நாட்களாகத் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். எதிரிகள் விலகுவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே, புதிய பாதையில் பயணிக்க விருப்பம் இருக்கும். வெளியில் உண்பதை தவிர்க்கவும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்ப அடிப்படை வசதிகள் உயரும். வெளி நபர்களிடம் கவனமாக இருக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

கன்னி ராசி நேயர்களே, பொருளாதார நிலை சீராக இருக்கும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். புது தொடர்புகள் அதிகரிக்கும். அயல்நாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே, வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். வெளியிடங்களில் வார்த்தைகளை குறைத்து பேசவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி நேயர்களே, புதிய நட்பால் ஆதாயம் உண்டு. அடிக்கடி செல்லும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மகர ராசி நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். உடல் உபாதைகள் நீங்கும். பாலிய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கும்ப ராசி நேயர்களே, குடும்ப பொறுப்பை உணர்ந்து நடக்கவும். சுற்றி உள்ளவர்களின் ஆதரவு பெருகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மீன ராசி நேயர்களே, யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். திட்டமிட்டபடி பயணங்கள் மேற்கொள்ள முடியும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

------------------------------------------------------------------------------

இன்றைய சிறப்பு:

குரு வழிபாட்டிற்கு உகந்த தினம்,

மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் !!!

------------------------------------------------------------------------------

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE