விசுவாவசு வருடம், பங்குனி 30 ம் நாள்,
2026 ஏப்ரல் 13-ம் தேதி, திங்கட்கிழமை
சூரிய உதயம்: காலை 06 மணி 04 நிமிடங்கள்
இன்றைய நட்சத்திரம்: பகல் 01:22 வரை அவிட்டம் பின்பு சதயம்
சந்திராஷ்டமம்: பூசம் ஆயில்யம்
சூலம்: கிழக்கு
இன்று நல்ல நேரம்:
காலை: 06:30 முதல் 07:30 வரை
மாலை: 04:30 முதல் 05:30 வரை
இராகு காலம்: காலை 07:30 முதல் 09.00 வரை
எமகண்டம்: மதியம்: 10.30 முதல் 12.00 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி நேயர்களே, இல்லத்தில் நல்ல செய்தி ஒன்று வரும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களால் சில சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். சம்மதமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்,
மிதுன ராசி அன்பர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களால் செலவினங்கள் கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே, அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உறவினர்களிடம் இருந்த பகைமை நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி நேயர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். யாருக்கும் காரணமின்றி சிபாரிசு செய்ய வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் சாதிக்க முடியும்.
கன்னி ராசி நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவதால் சிக்கல்கள் வரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
துலாம் ராசி நேயர்களே, தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். பிரியமானவர்களின் அன்பு அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே, மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பண வரவில் இருந்த சிக்கல் தீரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்து போட வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் வெற்றி பெரும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் வரும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கும்ப ராசி நேயர்களே,பொருளாதார நிலை சீரான வளர்ச்சி காணும். மறதி தொல்லை அவ்வப்போது வந்து போகும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிக்க முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் அதிகளவில் வரும். எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் பூர்த்தியாகும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். புது தொழில் யோகம் அமையும்.
இன்றைய சிறப்பு:
சுபமுகூர்த்த நாள்... சர்வ ஏகாதசி....
நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று !!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!