கடகம்: பிப்ரவரி மாத ராசி பலன் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

feb-2025-monthly-horoscope-of-kadagam-rasi-cancer
Spiritual

கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கடக ராசி அன்பர்களே...

தனாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பணவரத்து கூடுதலாக இருக்கும். நட்பு வட்டாரத்தில் புதிய நபர்களின் சேர்க்கை கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். வேலைகளின் போது கவனம் தேவை.

தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் வக்ரமாக இருந்தாலும் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சமாக இருப்பதால் யோகமே. தொழில் வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயலாற்றுவது பல பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும்.

குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் உண்டாகலாம் அதன் மூலம் கணவன், மனைவி இடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. பெரியோர்களின் ஆலோசனை குடும்பத்திற்கு முக்கியம்.

பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகள் பலன் கொடுக்கலாம்.

கலைத் துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் அனுகூலமான பலன் தரும்.

வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவருக்கு செய்யும் நன்மையே உங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும்.

அரசியல் துறையினருக்கு கெட்ட விசயத்திக்காக உதவ போய் வீண் பழி ஏற்படலாம். அதீத கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக்கவலை ஏற்படலாம். உங்கள் கடின உழைப்பே அதற்கு மருந்து. பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை பலன் கொடுக்கும்

பரிகாரம்: துர்க்கை வழிபாடு

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

சந்திராஷ்டம் தினங்கள்: 1, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20. 21, 22

மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....

SCROLL TO NEXT ARTICLE