பராபவ வருடம், சித்திரை மாதம் 1 ம் நாள்,
2026 ம் வருடம், ஏப்ரல் 14 ம் நாள், செவ்வாய்க்கிழமை
சூரிய உதயம்: காலை 06 மணி 04 நிமிடங்கள்
இன்றைய நட்சத்திரம்: பகல் 01:42 வரை சதயம் பின்பு பூரட்டாதி
சந்திராஷ்டமம்: ஆயில்யம் மகம்
சூலம்: வடக்கு
இன்று நல்ல நேரம்:
காலை: 07:30 முதல் 08:30 வரை
மாலை: 04:30 முதல் 05:30 வரை
இராகு காலம்: மதியம் 03.00 முதல் 04.30 வரை
எமகண்டம்: காலை: 09.00 முதல் 10.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். மன சஞ்சலங்கள் ஏற்பட்டு பின் சீராகும். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். வெளிநாட்டு யோகம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
மிதுன ராசி அன்பர்களே, மனதில் புது உற்சாகம் பிறக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கடக ராசி அன்பர்களே, பேச்சில் இனிமை கூடும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்ம ராசி நேயர்களே,பண நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உறவினர்களால் சில நன்மைகள் உண்டு. அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கன்னி ராசி நேயர்களே, விருப்பமான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். உத்யோகத்தில் கவனம் தேவை.
துலாம் ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உஷ்ணம் தொடர்பான தொந்தரவு இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே,சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். சொந்த பந்தங்ககளின் வருகை இருக்கும். தடைப்பட்ட வேலைகளை சீக்கிரத்தில் முடிக்க முடியும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
தனுசு ராசி நேயர்களே, வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்க பழகவும். பெண்கள் வழியில் நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.
மகர ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசவும். எதிரிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம். தொழில், வியாபாரம் மேன்மைடையும்.
கும்ப ராசி நேயர்களே,தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே, குடும்பம் வளர்ச்சி பாதையில் செல்லும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உறவினர்களிடம் சின்ன மனவருத்தம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
இன்றைய சிறப்பு:
தமிழ் புத்தாண்டு...
சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று !!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!