இன்றைய தினம்: 18-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-18-apr-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 05 ம் நாள்,

2026, ஏப்ரல் 18 ம் நாள், சனிக்கிழமை


சூரிய உதயம்: காலை 06 மணி 02 நிமிடங்கள்


இன்றைய நட்சத்திரம்: காலை 10:52 AM வரை அஸ்வினி பின்பு பரணி

சந்திராஷ்டமம்: அஸ்தம் சித்திரை

சூலம்: கிழக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
07:30 முதல் 08:30 வரை

மாலை:
04:30 முதல் 05:30 வரை

இராகு காலம்:
காலை 09.00 முதல் 10.30 வரை

எமகண்டம்:
மதியம்: 01.30 முதல் 03.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். பண நெருக்கடியை சமாளிக்க முடியும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே,உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். நெருங்கிய உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவர். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,தீர்க்க முடியாத பிரச்னைக்கு கூட தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கடக ராசி அன்பர்களே, பண முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்பார்த்த விஷயங்கள் முடிவடையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் அமைதியும், சந்தோஷமம் இருக்கும். வெளிவட்டாரத் பழக்கங்கள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செழிக்கும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்ப பணிகளை தாமதமின்றி முடிக்க முடியும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியரும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்ப வசதிகளை மேம்படுத்த முடியும். வார்த்தைகளை குறைத்து பேசவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே, வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. ஆன்மிக எண்ணம் மேலோங்கும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மகர ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். எடுத்த காரியத்தை கச்திகமாக செய்து முடிக்க முடியும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கும்ப ராசி நேயர்களே,புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். பண வரவில் இருந்த சிக்கல் நீங்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரியமானவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகள் காணாமல் போவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


இன்றைய சிறப்பு:

சந்திர தரிசனம்...

ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE