இன்றைய தினம்: 20-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-20-apr-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 07 ம் நாள்,

2026, ஏப்ரல் 20 ம் நாள், திங்கள்


சூரிய உதயம்: காலை 06 மணி 02 நிமிடங்கள்


இன்றைய நட்சத்திரம்: காலை 07:52 AM வரை கார்த்திகை பின்பு ரோகிணி

சந்திராஷ்டமம்: சுவாதி

சூலம்: கிழக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
06:30 - 07:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
காலை 07.30 - 09.00 வரை

எமகண்டம்:
காலை 10.30 - 12.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்ப சந்தோஷத்தை அதிகரிக்க முடியும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். அடிக்கடி செல்லும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

ரிஷப ராசி அன்பர்களே,மன உறுதி அதிகரிக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவிடையே அன்பும், பாசமும் வளரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். ஜாமின் கையெழுத்திட வேண்டாம். உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே, சொந்த பந்தங்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உடல் நலம் சீராகும். அடிக்கடி பிரயாணங்கள் செல்ல நேரிடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி நேயர்களே,விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். பிராத்தனைகளை தாமதிக்காமல் நிறைவேற்றவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் திட்டமிடல் அவசியம். நெருங்கிய உறவினர்கள் ஆதரவாக இருப்பர். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

துலாம் ராசி நேயர்களே, பொருளாதார நிலை உயரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்ய முடியும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப சிக்கலை சமாளிக்க முடியும். புது நண்பர்களால் நிறைய நன்மைகள் உண்டு. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே, யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி நேயர்களே, புது முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களிடத்தில் கேட்ட உதவி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்ப ராசி நேயர்களே,பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டார பழக்கங்கள் சாதகமாக அமையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

மீன ராசி நேயர்களே, குடும்ப கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும். பெரியோர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.


இன்றைய சிறப்பு:

சுபமுகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், அக்ஷய திரிதியை...

நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE