இன்றைய தினம்: 21-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-21-apr-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 08 ம் நாள்,

2026, ஏப்ரல் 21 ம் நாள், செவ்வாய்


சூரிய உதயம்: காலை 06 மணி 01 நிமிடங்கள்


இன்றைய நட்சத்திரம்: காலை 06:15 AM வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம்

சந்திராஷ்டமம்: விசாகம்

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
07:30 - 08:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
மதியம் 03.00 - 04.30 வரை

எமகண்டம்:
காலை 09.00 - 10.30 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே,எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும். நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் குதூகலம் நிறையும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கடக ராசி அன்பர்களே, தன வரவுக்கு வாய்ப்பு உண்டு. யாரையும் குறை சொல்ல வேண்டாம். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே,குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். அசதியும், சோர்வும் நீங்கி உற்சாகம் ஏற்படும். வேற்றுமதத்தவர் உதவுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி நேயர்களே, மகிழ்ச்சியான செய்தி ஒன்று காதில் விழும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். வதந்திகளை நம்ப வேண்டாம். வீண் செலவுகளை குறைத்து சேமிக்க பார்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே, எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். மறதி தொல்லை அவ்வப்போது இருக்கும். பிரியமானவர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். விருப்பமானவர்களுடன் மனம் விட்டு பேசவும். அடிக்கடி கடன் வாங்குவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மகர ராசி நேயர்களே, பொது பிரச்சனையில் தலையிட வேண்டாம். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கும்ப ராசி நேயர்களே,குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகம் இருக்கும். கடந்த கால நினைவுகள் நினைவுக்கு வரும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிக்கும்.

மீன ராசி நேயர்களே, நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.


இன்றைய சிறப்பு:

சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE