இன்றைய தினம்: 22-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-22-apr-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 09 ம் நாள்,

2026, ஏப்ரல் 22 ம் நாள், புதன்


சூரிய உதயம்: காலை 06 மணி


இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 04:22 AM வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை

சந்திராஷ்டமம்: அனுஷம்

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
மதியம் 12.00 - 01.30 வரை

எமகண்டம்:
காலை 07.30 - 09.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,இழுபறியில் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். நண்பர்களால் சில மன சங்கடங்கள் வரும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே,பிரபலங்களின் சந்திப்பு ஆதாயம் தரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

மிதுன ராசி அன்பர்களே,சொந்த பந்தங்களால் வந்த கஷ்டங்கள் நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேச வேண்டாம். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கடக ராசி அன்பர்களே, இனந்தெரியாத சில கவலைகள் வந்து போகும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க பார்க்கவும். உத்யோகத்தில் கவனம் தேவை.

சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். மன தைரியம் கூடும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தை பற்றிய கவலை அதிகமாகும். பயணங்களால் அலைச்சல் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்ப நிதி நிலைமை சீரடையும். உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே, எல்லாரிடமும் விட்டுக்கொடுத்து போகவும். மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். எதிரிகள் பலம் குறைந்து காணப்டுவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகர ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வசீகரப் பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். வாகன பராமரிப்புச் செலவுகள் கூடும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே,குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

மீன ராசி நேயர்களே, நினைத்த காரியம் நினைத்தபடியே நடக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.


இன்றைய சிறப்பு:

சஷ்டி விரதம்....

கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE