பராபவ வருடம், சித்திரை மாதம் 10 ம் நாள்,
2026, ஏப்ரல் 23 ம் நாள், வியாழன்
சூரிய உதயம்: காலை 06 மணி
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 03:02 AM வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
சந்திராஷ்டமம்: கேட்டை
சூலம்: தெற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
10:30 - 11:30 வரை
மதியம்:
12:30 - 01:30 வரை
இராகு காலம்:
மதியம் 01.30 - 03.00 வரை
எமகண்டம்:
காலை 06.00 - 07.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க முடியும். பண வரவு திருப்தியளிக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே,கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வேண்டியவர்கள் வழியில் நன்மைகள் உண்டு. வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
மிதுன ராசி அன்பர்களே,குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சூழல் உருவாகும். அனாவசிய பேச்சுகளை தவிர்க்கவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே, மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்களின் அறிவுரைகளை எடுத்துக்கொள்ளவும். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சிம்ம ராசி நேயர்களே,வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். குல தெய்வ வழிபாடு சிறக்கும். நண்பர்கள் உதவி செய்வர். தொழில், வியபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
கன்னி ராசி நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் சிறக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
துலாம் ராசி நேயர்களே, எல்லா காரியங்களும் தடையின்றி நிறைவேறும். உறவினர்களின் அன்பு, பாசம் மகிழ்ச்சி தரும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே,நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியம் கைகூடும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
தனுசு ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். புதிதாக அறிமுகமான நபர்களிடம் கவனமாக பழகவும். எதிரிகளின் பலம் குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகர ராசி நேயர்களே, புதுமையான விஷயங்களை கையாளும்போது கவனம் தேவை. யாருடைய விஷயத்திலும் தலையிட வேண்டாம். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்ப ராசி நேயர்களே,குடும்பதில் நிம்மதி சற்று குறையும். ஆடம்பர செலவுகளால் பற்றாக்குறை ஏற்படும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் வீண் செலவுகளை குறைக்கவும். புது நட்பு வட்டாரம் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெளிவட்டார பழக்கவழக்கங்கள் நலம் தரும். புது தொழில் யோகம் அமையும்.
இன்றைய சிறப்பு:
சுபமுகூர்த்தம், வாஸ்து நாள்....
மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!