பராபவ வருடம், சித்திரை மாதம் 11 ம் நாள்,
2026, ஏப்ரல் 24 ம் நாள், வெள்ளி
சூரிய உதயம்: காலை 06 மணி
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 01:42 AM வரை புனர்பூசம் பின்பு பூசம்
சந்திராஷ்டமம்: மூலம் பூராடம்
சூலம்: மேற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
12:30 - 01:30 வரை
மாலை:
04:30 - 05:30 வரை
இராகு காலம்:
மதியம் 10.30 - 12.00 வரை
எமகண்டம்:
மாலை 03.00 - 04.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியம் நிறைவேறும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே,சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். புது நட்பால் நன்மை வந்து சேரும். செலவுகளை குறைக்க பார்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
மிதுன ராசி அன்பர்களே,விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். பிரபலங்கள் அறிமுகமாவர். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கடக ராசி அன்பர்களே, புது முயற்சிகள் நல்ல பலனை தரும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் வரும். பிரியமானவர்களிடம் ஏற்பட்ட மனவருத்தம் குறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சிம்ம ராசி நேயர்களே,எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பதில் சின்ன தடுமாற்றம் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கன்னி ராசி நேயர்களே, பழையமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உணவு கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
துலாம் ராசி நேயர்களே, மனதில் புது தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம். காரிய தடை விலகும். உத்யோகத்தில் கவனம் தேவை.
விருச்சிக ராசி நேயர்களே,மனதில் பட்டதை தைரியமாகச் செய்ய முடியும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். சாட்சி கையெழுத்து போடுவதால் சில சிக்கல்கள் வரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தனுசு ராசி நேயர்களே, மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். பெற்றோரின் கருத்தை ஏற்றுக்கொள்ளவும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் புது விஷயங்கள் நடக்கும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கும்ப ராசி நேயர்களே,வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். காரணமன்றி யாரையும் குறை சொல்ல வேண்டாம். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே, வருங்காலம் பற்றிய கனவுகள் இருக்கும். பொருளாதார நிலை உயரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
இன்றைய சிறப்பு:
அஷ்டமி ...
ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!