இன்றைய தினம்: 25-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-25-apr-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 12 ம் நாள்,

2026, ஏப்ரல் 25 ம் நாள், சனி


சூரிய உதயம்: காலை 05:59 மணி


இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 12:37 AM வரை பூசம் பின்பு ஆயில்யம்

சந்திராஷ்டமம்: மூலம் பூராடம்

சூலம்: மேற்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
07:30 - 08:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
காலை 09.00 - 10.30 வரை

எமகண்டம்:
மதியம் 01.30 - 03.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,புத்தி சாதுரியம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். தொலைதூர பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டி இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே,புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். அனாவசிய செலவுகளை குறைக்கவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுன ராசி அன்பர்களே,ஆன்மீகத்தில் ஈடுபாடு வரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். பெரியவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கடக ராசி அன்பர்களே, சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். யாரையும் பகைத்துக் கொள்ள முடியும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். நெடுந்தூர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

கன்னி ராசி நேயர்களே, மனதில் புது விதமான சிந்தனைகள் உதிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கணவன் மனைவிக்குள், விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம் ராசி நேயர்களே, பெரியோர்களின் ஆசி கிட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

விருச்சிக ராசி நேயர்களே, தன் பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து செயல்படவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி நேயர்களே, சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்ல பழகிக்கொள்ளவும். உடல் நலம் பலம் பெரும். பயணங்களால் தேவைற்ற அலைச்சல் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சுற்று வட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கும்ப ராசி நேயர்களே, பிரியமானவர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். யாரை எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே, குடும்ப நபர்களுக்கு முக்கியத்துவம் தரவும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். பண விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


இன்றைய சிறப்பு:

நவமி...

ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE