கன்னி: பிப்ரவரி மாத ராசி பலன் (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)
கன்னி ராசி அன்பர்களே...
ஆடம்பர வாழ்க்கையில் அதிகம் நாட்டமுடையவர். சிக்கனத்தை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டால் சீக்கிரம் முன்னேறலாம். இந்த மாதம் தனாதிபதி சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் உச்சமாக இருப்பதால் பணவரத்து நிச்சயம். சொத்து சம்பந்தமான தடைகள் விலகும். தொலைதூர தகவல்கள் நல்லதாக இருக்கும்.
மனக் குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பயணங்கள் மூலம் பலன் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் தொய்வு நிலை மாறி முன்னேற்றம், லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக கரம் நீட்டுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமைக்கு மரியாதையை கிடைக்கும்.
சுக்கிரனின் உச்ச பலத்தால் குடும்பத்தில் இனிய சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் மன திருப்தி கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொலைதூர தகவல்கள் பெண்களுக்கு மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.
கலைத் துறையினருக்கு, தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும்.
அரசியல் துறையினருக்கு உடல் சோர்வடைய நேரலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திறமை வெளிப்படும்
பரிகாரம்: பெருமாளுக்கு துளசி வழிபாடு குறைகள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம் தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....
Tags:
#கன்னி ராசி பலன்கள் #மாத ராசி பலன் #பிப்ரவரி மாத பலன்கள் #அஸ்தம் #சித்திரை