இன்றைய தினம்: 26-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-26-apr-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 13 ம் நாள்,

2026, ஏப்ரல் 26 ம் நாள், ஞாயிறு


சூரிய உதயம்: காலை 05:59 மணி


இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 12:37 AM வரை பூசம் பின்பு ஆயில்யம்

சந்திராஷ்டமம்: உத்திராடம் திருவோணம்

சூலம்: மேற்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
07:30 - 08:30 வரை

மாலை:
03:30 - 04:30 வரை

இராகு காலம்:
மாலை 04.30 - 06.00 வரை

எமகண்டம்:
மதியம் 12.00 - 01.30 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்பத்தை பற்றிய யோசனை அதிகமாகும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் சிரமம் இருக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

ரிஷப ராசி அன்பர்களே,ஆதாயம் தரும் விஷயங்களில் கவனம் செலுத்தவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,குடும்ப விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். சேமிப்பில் கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி அன்பர்களே, எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்கள் உதவி கேட்டு வருவர். எதிர்பார்த்த இடத்திலிருந்த்து நல்ல தகவல் வரும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வெளிவட்டாரத் பழக்கங்கள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே, ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விஐபிகளின் தொடர்பு கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி நேயர்களே, மனதில் தெளிவு நிலை உண்டாகும். வேண்டியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் இருக்கும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்ப விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருப்பர். வெளிநாட்டு யோகம் உண்டு. புது தொழில் யோகம் அமையும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். ஆன்மிக ஆர்வம் கூடும். நண்பர்களிடம் விவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மகர ராசி நேயர்களே, யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொலை தூர பயணங்களை தவிர்க்கவும். உணவு கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

கும்ப ராசி நேயர்களே,குடும்ப சுமை அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய வேலைகள் முடிவடையும். பிரியமானவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகள் விலகி செல்வர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


இன்றைய சிறப்பு:

மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE