இன்றைய தினம்: 27-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-27-apr-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 14 ம் நாள்,

2026, ஏப்ரல் 27 ம் நாள், திங்கள்


சூரிய உதயம்: காலை 05:59 மணி


இன்றைய நட்சத்திரம்: இரவு 11.33 PM வரை பூரம் பின்பு உத்திரம்

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

சூலம்: கிழக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
06:00 - 07:00 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
காலை 07.30 - 09.00 வரை

எமகண்டம்:
காலை 10.30 - 12.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்ப செல்வாக்கை உயர்த்த முடியும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே,திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக நடத்த முடியும். மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் தேவை. தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

மிதுன ராசி அன்பர்களே,கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பிரியமானவர்களிடம் அனுசரித்து போகவும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கடக ராசி அன்பர்களே, சந்தர்ப்ப, சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும். பண நெருக்கடியை எதிர்கொள்ள முடியும். உறவினர்கள் உதவி என்று வந்து நிற்பர். தொழில், வியாபாரம் செழிக்கும்

சிம்ம ராசி நேயர்களே,சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிக்க முடியும். பிடிவாத போக்கை கைவிடவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

கன்னி ராசி நேயர்களே, தெய்வ வழிபாடு மன நிம்மதியை தரும். நிதி நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை இருக்கும். நண்பர்களிடம் விவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகள் நிறையவே இருக்கும். காணாமல் போன ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

விருச்சிக ராசி நேயர்களே,தேவையான பொருட்களை வாங்க முடியும். வெளி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தை பெருமைபடுத்த முடியும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மகர ராசி நேயர்களே, பொது காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கும்ப ராசி நேயர்களே,வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். கடன் நெருக்கடிகள் வெகுவாக குறையும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். சிக்கலான விஷயங்களை கூட எளிதில் தீர்க்க முடிக்க முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.


இன்றைய சிறப்பு:

சர்வ ஏகாதசி...

நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE