பராபவ வருடம், சித்திரை மாதம் 18 ம் நாள்,
2026, மே 01 ம் நாள், வெள்ளி
சூரிய உதயம்: காலை 05:57 AM
இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 02:41 AM வரை சித்திரை பின்பு சுவாதி
சந்திராஷ்டமம்: ரேவதி
சூலம்: மேற்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
09:30 - 10:30 வரை
மாலை:
04:30 - 05:30 வரை
இராகு காலம்:
காலை 10.30 - 12.00 வரை
எமகண்டம்:
மாலை 03.00 - 04.30 வரை
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,குடும்ப ஒற்றுமையை பலப்படுத்த முடியும். அசதியும், சோர்வும் நீங்கி உற்சாகம் ஏற்படும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே,மனதில் தெளிவு பிறக்கும். மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மிதுன ராசி அன்பர்களே,பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். தேவையற்ற மன மனபயத்தை நீக்கவும். பெற்றோர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கடக ராசி அன்பர்களே, குடும்ப சிக்கல்கள் அகலும். பெண்கள் வழியில் ஆதரவு பெருகும். சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்ம ராசி நேயர்களே,கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரையும் குறை சொல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். புது தொழில் யோகம் அமையும்.
கன்னி ராசி நேயர்களே, ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். யாரையும் காரணமின்றி பகைத்துக்கொள்ள வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
துலாம் ராசி நேயர்களே, ஞாபக மறதி தொல்லை இருக்கும். அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சுற்றி இருப்பவர்களிடம் நல்லுறவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிக ராசி நேயர்களே,விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுப்பர். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
தனுசு ராசி நேயர்களே, பெரிய தொகை பரிமாற்றங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மகர ராசி நேயர்களே, சமூக நலனில் அக்கறை ஏற்படும். நண்பர்களால் சொல்லும்படியான ஆதாயம் உண்டு. திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கும்ப ராசி நேயர்களே,கடந்த கால சிந்தனைகள் நினைவுக்கு வரும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மீன ராசி நேயர்களே, விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். புது நட்பு வட்டாரம் உருவாகும். தொழில், வியாபாரம் சிறப்படையும்.
இன்றைய சிறப்பு:
சித்ரா பௌர்ணமி ...
ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!