துலாம்: பிப்ரவரி மாத ராசி பலன் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்)

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்)
துலாம் ராசி அன்பர்களே...
அனைவருடனும் அன்பாக பழகும் உங்களுக்கு, இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் மறைந்திருந்தாலும் உச்சமாக இருப்பதால் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். செவ்வாய் சஞ்சாரத்தால் மன நிம்மதியும், மனோதிடமும் சிறக்கும்.
தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடும் உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் உற்சாகமாக காணப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் தடைகள், போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் தெளிவாக சிந்தித்து வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
குடும்ப ஸ்தானத்தை குருவும் சனியும் பார்க்கிறார்கள். ஆக மகிழ்ச்சி, உற்சாகத்திற்கு குறைவிருக்காது. கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலைகள் நீங்கும். பெண்களுக்கு முயற்சிகளில் பலன் கிடைக்கும். காரியங்களை முடிப்பதில் திறமை வெளிப்படும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கலைத் துறையினருக்கு மற்றவர்கள் அனுசரணை நல்லது. மனக்கவலை உண்டாகும். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம்.
அரசியல் துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி வெற்றி வசப்படும்.
மாணவர்கள் நினைத்ததை விட முன்னேற்றம் இருக்கும். தேர்வு பயமின்றி செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்
பரிகாரம்: துர்க்கை வழிபாடு துயரை தீர்க்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
சந்திராஷ்டம் தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....
Tags:
#துலாம் ராசி பலன்கள் #மாத ராசி பலன் #பிப்ரவரி மாத பலன்கள் #சுவாதி #சித்திரை